search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென் மாவட்டங்கள்"

    தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும், பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. #IndiaMeteorologicalDepartment #HeavyRainfall
    சென்னை:

    சென்னையை நோக்கி கடந்த வாரம் வந்த பெய்ட்டி புயல் ஆந்திரா பக்கம் சென்று விட்டதால் சென்னை மற்றும் வட தமிழகத்தில் மழை இல்லை. கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவுகிறது.

    தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி உள்ளது.

    இதுபோல் அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி பரவி உள்ளது.



    இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும், பரவலாக மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் ஒரு சில நேரங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IndiaMeteorologicalDepartment #HeavyRainfall
    தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் 7-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD #TNRain #Northeastmonsoon
    சென்னை:

    தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த 1-ந்தேதி வடக்கிழக்கு பருவமழை தொடங்கியது.

    அன்று முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கணிசமான அளவுக்கு மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது வலுப்பெற்று வருவதால் கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கிறது.

    குறிப்பாக தென் மாவட்டங்களில் பருவமழை அதிகமாக பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. இன்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் 7-ந்தேதி முதல் மழை அளவு அதிகரிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


    இது தொடர்பாக இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. எனவே இந்த சீசனில் தமிழ்நாட்டில் ஓரளவு மழை பெய்யும்.

    வங்க கடலில் இலங்கை அருகே உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை மிக பலத்த மழை பெய்யும். எனவே இந்த கால கட்டங்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    கடலோர மாவட்டங்களில் மழை விட்டு விட்டு பெய்யும். சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #IMD #TNRain #Northeastmonsoon
    ரெயில் பயணிகளை குறி வைத்து ஆம்னி பஸ்கள் எழும்பூரில் இருந்து இயக்குவது போல் அரசு விரைவு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு முதல் கட்டமாக 100 சொகுசு பஸ்கள் வழங்கப்படுகிறது. முதன் முதலாக ஏசி படுக்கை வசதியுடன் அரசு பஸ்கள் தற்போது இயக்கப்படுகிறது. சென்னை-திண்டுக்கல் வழித்தடத்தில் மட்டும் கழிப்பிட வசதியுடன் கூடிய அல்ட்ரா டீலக்ஸ் பஸ் விடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து மதுரை, தேனி, போடி, சேலம், கரூர், ஈரோடு ஆகிய நகரங்களுக்கு படுக்கை வசதி சொகுசு பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இன்று முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கீழக்கரை ஆகிய பகுதிகளுக்கு ஏசி படுக்கை வசதி பஸ் இயக்கப்படுகிறது. மேலும் சென்னை-பெங்களூர் இடையே படுக்கை வசதி பஸ் இன்று விடப்பட்டது. ஏற்கனவே விடப்பட்ட சொகுசு பஸ்களில் போடி, கரூர் பஸ்களில் கூட்டம் குறைவாக காணப்படுகின்றது. மற்ற வழித்தடங்களில் எல்லா நாட்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதனால் போடி, கரூருக்கு இன்று முதல் எழும்பூரில் இருந்து அரசு விரைவு சொகுசு பஸ் இயக்கப்படுகின்றன. எழும்பூரில் இருந்து இரவு 7 மணிக்கு போடிக்கும், 8 மணிக்கு கரூருக்கும் ஏசி படுக்கை வசதி சொகுசு பஸ் புறப்பட்டு செல்கின்றன.

    எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரெயில்கள் புறப்பட்டு செல்வதால் ரெயிலில் இடம் கிடைக்காதவர்கள், தவற விட்டவர்கள் ஆம்னி பஸ்களில் பயணம் செய்கிறார்கள். எழும்பூரில் ரெயில் நிலையம் பகுதியில் ஆம்னி பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி செல்கிறது. இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஆம்னி பஸ்கள் சாலையை ஆக்கிரமித்து கொள்வதால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

    இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகமும் எழும்பூரை மையமாக வைத்து பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, கிழக்கரை உள்ளிட்ட அனைத்து தென் மாவட்ட பகுதிகளுக்கும் எழும்பூரில் இருந்து விரைவில் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.

    ரெயில் பயணிகளை குறி வைத்து ஆம்னி பஸ்கள் எழும்பூரில் இருந்து இயக்குவது போல் அரசு விரைவு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி கூறுகையில், ‘‘கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்ட பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படும். ஏசி படுக்கை வசதி பஸ்களை மட்டும் எழும்பூரில் இருந்து இயக்குவதற்கு முடிவு செய்துள்ளோம். தலைமை செயலகம், எழிலகம், உள்ளிட்ட அரசு பணிகள் தொடர்பாக வெளியூரில் இருந்து வரகூடியவர்கள் எழும்பூரில் இருந்து தான் பயணத்தை தொடருகிறார்கள்.

    ரெயிலில் இடம் கிடைக்காத பயணிகள் பஸ்கள் மூலம் சொந்த ஊர் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அவர்கள் கோயம்பேடு சென்று அங்கிருந்து பயணத்தை தொடர்வதை காட்டிலும் எழும்பூரில் இருந்து அரசு பஸ்களில் பயணத்தை தொடர இது உதவியாக இருக்கும்’’ என்றார்.
    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ளன.
    சென்னை:

    கல்வி தரத்தில் நெல்லை மாவட்டம் எப்போதும் முன்னணியில் இருக்கும். ‘தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு’ என இதை பெருமையுடன் அழைப்பர். ஆனால் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இது பின்னோக்கி சென்றுள்ளது.

    பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தில் இந்த மாவட்டம் 10-வது இடத்தில் உள்ளது. இங்கு மொத்தம் 37,702 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 16,241 பேர் மாணவர்கள், 21,461 பேர் மாணவிகள்.

    312 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதியவர்களில் 35,872 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் நெல்லை மாவட்டம் 96,08 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    இது கடந்த ஆண்டை விட 1 சதவீதம் குறைவு. இதனால் இம்மாவட்டம் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய 312 பள்ளிகளில் 119 பள்ளிகளில் மட்டுமே 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த 2016-17-ம் கல்வி ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம் 4-வது இடத்தில் இருந்தது. ஆனால் இந்த முறை 7-வது இடத்துக்கு பின்நோக்கி சென்று விட்டது.

    இந்த மாவட்டத்தை சேர்ந்த 20,923 பேர் (8,510 மாணவர்கள், 11,475 மாணவிகள்) தேர்வு எழுதினர். அவர்களில் 95.52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டு பெற்ற தேர்ச்சி விகிதத்தை விட குறைவாகும். அதாவது கடந்த 2017-2018-ம் கல்வி ஆண்டில் 96.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர்.

    கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம் உள்ள மாவட்டம் என்ற பெருமை கன்னியாகுமரிக்கு உண்டு. ஆனால், நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் 95.08 சதவீதம் பெற்றுள்ளது. இதனால் இம்மாவட்டம் 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கு 95.75 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



    கன்னியாகுமரி மாவட்டத்தில் 24,398 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். அவர்களில் 10,260 பேர் 58 அரசு பள்ளிகளில் படித்தவர்கள். அதில் 4 ஆதிதிராவிட நல பள்ளிகள் மற்றும் மலைவாழ் நல பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளும் அடங்குவர்.

    பிளஸ்-2 தேர்வில் மாவட்ட அளவில் 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டாலும் அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இத்தகவலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலா தெரிவித்தார்.

    கேரளா அருகே மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழகத்தில் கோடை காலம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்துவருகிறது. வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளது.

    வானிலை மாற்றம் குறித்து சென்னையில் உள்ள வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

    கேரளாவையொட்டிய பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உள்ளது. மேலும் கீழ் திசை காற்றும், மேற்கு திசை காற்றும் தமிழகத்தின் வழியாக செல்கிறது. இந்த இரு காரணங்களால் மழை பெய்துவருகிறது. அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது.

    அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    கடந்த மார்ச் மாதம் முதல் இன்று (நேற்று) வரை தமிழகத்தில் 85 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆனால் 77 மி.மீ. மழைதான் இயல்பாக பெய்யவேண்டும். அதாவது 8 மி.மீ. மழை கூடுதலாக பெய்துள்ளது.

    இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    கோவிலங்குளம் 12 செ.மீ., மணியாச்சி 11 செ.மீ., சிட்டம்பட்டி 10 செ.மீ., மேலூர் 9 செ.மீ., மேட்டுப்பட்டி 7 செ.மீ., வால்பாறை, திருப்புவனம், துவாக்குடி, தாளவாடி, திருமங்கலம் தலா 5 செ.மீ., பாலக்கோடு, கேத்தி தலா 4 செ.மீ., பெருந்துறை, காங்கேயம், சாத்தூர், திருப்பத்தூர், பெரியநாயக்கன்பாளையம் தலா 3 செ.மீ. மற்றும் 3 செ.மீ.க்கு குறைவாக 45 இடங்களில் மழை பெய்துள்ளது. 
    ×